எப்படி உருவாகிறது அயோத்தியில் ராமர் கோயில்! - சிறப்பு தொகுப்பு!

Jul 31, 2020 09:01 PM 1894

வரும் 5 ந்தேதி ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை பிரதமர் மோடி நாட்ட உள்ளார்..இந்நிலையில் ராமர் கோயிலை எந்த வடிவில் கட்டுகிறார்கள்.. எவ்வளவு உயரத்தில் கட்டுகிறார்கள்.. என்பதை பற்றிய தகவல்களை எல்லாம் தற்போது பார்க்கலாம்..

அயோத்தியில் ராமர்கோயில் 161 அடி உயரத்தில் எழுப்பப்படுகிறது.

கோயிலில் 5 கோபுரங்கள் , ஒரு ராஜ கோபுரம் எழுப்பபட உள்ளது.. படிக்கட்டுகளின் அகலம் 16 அடிகளாக இருக்கும்.

ஆரம்பத்தில் கர்ப்ப கிரக கோபுரம், குடு கோபுரம், ரித்ய கோபுரம் என 3 கோபுரங்கள் மட்டுமே எழுப்ப திட்டமிட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக கீர்த்தன கோபுரம், ரங் கோபுரம், பிரார்த்தன கோபுரங்களும் எழுப்ப முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அக்காலங்களில் ரித்ய மற்றும் ரங் கோபுரங்களின் கீழ் இருக்கும் மண்டபவங்கள் தேவதாசிகள் நடனமாடும் இடங்களாக இருந்தன.. தற்போது இறைவனை தரிசிக்கும் இடங்களாகவும், இன்னபிற நிகழ்வுகள் நடக்கும் பகுதிகளாகவும் இருக்கும்..

வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில், குறிப்பாக ஷில்ப சாஸ்திரத்தின் அடிப்படையில் கோயில் 3 தளங்களாகவும், 360 தூண்களும் கொண்டதாக உருவாகிறது.. கருவறை எண்கோண வடிவில் உருவாக்கப்படுகிறது. ராமர் கோயில் வளாகத்தில் கூடுதலாக மேலும் 4 சிறு கோயில்கள் எழுப்பப்பட உள்ளன. கோயில் வளாகம் 67 ஏக்கரில் அமைகிறது.. கோயில் கட்டடம் மட்டும் 10 ஏக்கரில் விரிந்திருக்கும்.. நகர ஸ்டைல் அதாவது வட மாநில ஸ்டைலில் கோயில் எழுப்பப்படுகிறது...

ராமர்கோயில் வடிவமைப்பாளரின் பெயர் சந்திரகாந்த் பாய் சோம்புரா .. இந்த கட்டட கலைஞர் குஜராத்தை சேர்ந்தவர். இவரது முன்னோர் தான் குஜராத்தின் சோம்நாத் கோயிலை வடிவமைத்தவர். இக்குடும்பத்தினர் பல தலைமுறைகளாக கோயில் கட்டட கலைஞர்களாகவும், வாஸ்து சாஸ்திர நிபுணர்களாகவும் உள்ளனர்.

இக்கோயிலுக்கான கற்கள், ராஜஸ்தானின் வன்சி மலையில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக நாடுமுழுவதும் இருந்து ஏராளமான செங்கற்கள் அயோத்திக்கு ராமர் கோயில் கட்டுவதற்காக அனுப்பப்பட்டுள்ளன..அந்தந்த மொழிகளில் ஸ்ரீராம் என அக்கற்களில் எழுதப்பட்டுள்ளது. இதுபோல 2 லட்சம் செங்கற்கள் கோயில் வளாகத்தில் வந்து குவிந்துள்ளது.. அக்கற்களும் உபயோகப்படுத்தப்பட உள்ளன.

அயோத்தியில் ஏற்கனவே இருந்த கோயில் வடிவமைப்பை அடிப்படையாக வைத்தே புதிய கோயில் எழுப்பப்படுவதாக கூறப்படுகிறது. கோயில் கட்டி முடிக்க 3 முதல் மூன்றரை ஆண்டுகள் ஆகலாம்..

Comment

Successfully posted