இலவச சட்ட ஆலோசனைகளை பெற எப்படி அணுகுவது?

Feb 12, 2019 09:12 PM 1313

எளிய மக்களுக்கு சட்ட உதவி என்பது சலுகை அல்ல, அது அவர்களின் உரிமை. சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும், நீதி பெற சம வாய்ப்பை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வரும் சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் என்னென்ன என்பதை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு...

தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் கீழ், ஒவ்வொரு மாநிலத்திலும் யாவருக்கும் நீதி கிடைக்க வழி வகை செய்ய வேண்டும் என்ற நோக்கோடு செயல்பட்டு வருகிறது, சட்டப்பணிகள் ஆணைக்குழு.

பெண்கள், குழந்தைகள் தங்கள் உரிமைகள் பற்றி தெரிந்து கொள்ளவும், மோட்டார் வாகன விபத்துகளில் இழப்பீடு பெறவும், குடும்ப பிரச்னைகள், கடன் கொடுக்கல் வாங்கல், காசோலை பிரச்சினைகள், தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காணவும்... ஏன் பொது மக்கள் தங்கள் பிரச்சினைகளை மனுவாக சமர்பித்தால், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வழி வகை செய்கிறது சட்டப்பணிகள் ஆணைக்குழு.

ஒருவர், சமரச மையம் மூலம் வழக்கை தீர்த்து கொள்ள விரும்பினால், நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகும் போதோ, அல்லது வழக்கறிஞர் மூலமாகவோ, வழக்கை சமரச மையத்தில் தீர்த்து கொள்வதாக தெரிவித்தால் போதும்... ஏன்.. பல நேரங்களில் நீதிமன்றமே சமரச மையம் செல்ல வலியுறுத்தி, அங்கு பேசி தீர்த்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறது.. எந்த வித தயக்கமும், தடையும் இல்லாமல், பாதிக்கபட்டவர்கள் ஆணையத்தை அணுக வேண்டும் எனவும், தகுந்தவர்களுக்கு நிதியுதவி செய்ய தயாராய் இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர் ஆணைய அதிகாரிகள்.

Comment

Successfully posted