குப்பைத் தொட்டியில் மனித எலும்புத் துண்டுகள்...

Aug 24, 2021 08:02 AM 726

சென்னையில், குப்பைத் தொட்டி அருகே மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சாஸ்திரி நகர் மெயின் ரோடு, 6வது குறுக்கு தெருவில் உள்ள குப்பை தொட்டி அருகில், பிளாஸ்டிக் கவரில் மனித மண்டை ஓடு, கை மற்றும் காலின் எலும்புகள் இருப்பதை கண்ட தூய்மைப் பணியாளர் ஒருவர், சாஸ்திரி நகர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவலர்கள், எலும்புகளைக் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

image

பொதுமக்கள் நடமாடும் முக்கிய சாலையில், குப்பைத் தொட்டியில் எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இதுகுறித்து காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted