கணவரின் நண்பரே மனைவியை கொலை செய்தது அம்பலம்

Oct 19, 2018 10:59 AM 329

கடலூரில் பெண் கொலை வழக்கில் கணவரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் அருகே உள்ள குண்டு உப்பலவாடி பகுதியில் வீட்டில் தனியாக இருந்த கோபால் என்பவரின் மனைவி சங்கீதா கழுத்தை அறுத்து படுகொலை செய்யப்பட்டார். நகைக்காக இந்த கொடூர கொலைச்சம்பவம் நடந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கை விசாரித்து வந்த போலீசார் சங்கீதாவை கொலை செய்ததாக கோபாலின் நண்பரும், புதுப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்தவருமான மணி என்பவரை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆறரை பவுன் நகையையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

Comment

Successfully posted