மனைவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற கணவன்!

May 18, 2021 05:51 PM 1258

 

அடையாறு சாஸ்திரி நகரை சேர்ந்தவர் 38 வயதான கல்பனா. இவருக்கும் மணிகண்டன் என்பவருக்கும் 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த மூன்று ஆண்டுகளாக தஞ்சாவூர் தனியார் வங்கியின் கிரெடிட் கார்டு பிரிவில் வேலை பார்த்து வந்த கல்பனாவிற்கு, சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவருடன் முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டது.

நட்பு காதலாக மலர்ந்து, பின் கல்பனாவை, பிரசன்ன வெங்கடேஷ் கடந்த ஜனவரியில், திருவேற்காடு கருமாரியம்மன் கோவிலில் வைத்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். பத்து நாட்கள் உல்லாச வானில் சிறகடித்து பறந்த தம்பதிகளின் வாழ்வில் புயல் வீச தொடங்கியது. வெறும் 10 நாட்கள் குடும்பம் நடத்திய பிரசன்ன வெங்கடேசன் தனது மனைவியை மிரட்டி ஆபாசமாக படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்த போவதாக மிரட்டியுள்ளார்.

இதில் அதிர்ந்துபோன, கல்பனா கணவனிடம் சண்டையிட்டுள்ளார். தொடர்ந்து தனது குடும்பத்தாருடன் சேர்ந்து கல்பனாவிடம் இருந்த 5 சவரன் தங்க நகைகள், 3 லட்சம் பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றை பிடுங்கிக் கொண்டு அவரை வீட்டை விட்டு துரத்திவிட்டுள்ளார். மேலும் வெங்கடேசனுக்கு ஏற்கனவே திருமணமானதும் கல்பனாவுக்கு தெரியவந்துள்ளது.

இதனால் மேலும் அதிர்ந்த கல்பனா, இதுகுறித்து ஆவடி காவல் நிலையத்தில் ் புகார் கொடுத்தார். இதனைதொடர்ந்து, கணவர் பிரசன்ன வெங்கடேஷ் அவருக்கு உடந்தையாக இருந்த அப்பா ரங்கசாமி, அம்மா விஜயா, சகோதரி புவனேஸ்வரி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்து, அவர்களை பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

Comment

Successfully posted