ஐதராபாத்தில் தனியார் பள்ளியின் சுவர் இடிந்த விபத்தில் சிறுமி உட்பட 2 மாணவர்கள் பலி

Aug 03, 2018 12:02 PM 837

 

ஐதராபாத் அருகேயுள்ள கூக்கட்பள்ளி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று மாலை மாணவ மாணவிகளுக்கு கராத்தே பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, பள்ளியில் உள்ள ஒரு கட்டடத்தின் சுவர் இடிந்து விழுந்தது. இதில், சந்தனா என்ற 8 வயது சிறுமி மற்றும் மகி கிருஷ்ணா என்ற 9 வயது சிறுவன் கட்டட இடிபாடுகளுக்கு சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயமடைந்த மாணவர்கள் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comment

Successfully posted