மமதா பானர்ஜி போடும் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன் -அமித் ஷா

May 15, 2019 02:47 PM 90

தன் மீது மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி போடும் வழக்குகளை கண்டு அஞ்சமாட்டேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேற்கு வங்கத்தில் வன்முறையை பாஜக தூண்டிவிடுவதாக மம்தா பானர்ஜி கூறிவருவது அப்பட்டமான பொய் என்றார். பாஜக போட்டியிடும் பிற மாநிலங்களில் எல்லாம் 6 கட்ட வாக்குப்பதிவுகள் அமைதியாக நடந்து முடிந்திருப்பதாக கூறிய அமித் ஷா, ஆனால் 42 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் மட்டும் வன்முறைகள் நிகழ்வதற்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் காரணம் என்பது தெள்ளத் தெளிவாக தெரிவதாக கூறினார். இந்தநிலையில் தன் மீது முதலமைச்சர் மமதா பானர்ஜி வழக்கு பதிவு செய்திருப்பதாக தகவல் கிடைத்திருப்பதாகவும், இதற்கு எல்லாம் பாரதிய ஜனதா தொண்டர்கள் அஞ்சமாட்டார்கள் எனவும் அமித் ஷா தெரிவித்தார்.

Comment

Successfully posted