நாட்டில் அமைதியை நிலைநாட்ட தயாராக இருக்கிறேன் - ரஜினிகாந்த் டுவிட்

Mar 02, 2020 06:50 AM 855

நாட்டில் அமைதியை நிலை நாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரரில் தெரிவித்துள்ளார்.

டெல்லி கலவரத்தை தடுக்க மத்திய உளவுத்துறை தவறிவிட்டதாக, நடிகர் ரஜினிகாந்த் அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், தன்னை பாஜகவின் ஊது குழலாக என விமர்சிப்பது வேதனை அளிப்பதாக ரஜினிகாந்த் வருத்தம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகள் நடிகர் ரஜினிகாந்த்தை சந்தித்து பேசினர். அவர்களின் சந்திப்பிற்கு பிறகு, டுவிட்டரில் நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளின் தரப்பு ஆலோசனைகளைக் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் நாட்டின் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போது, தயாராக இருக்கிறேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted