பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் நிச்சயம் போராடுவேன் : நடிகர் சிம்பு

Feb 24, 2020 12:19 PM 510


பெண்கள் தன் மீது அதிக பாசம் வைத்திருப்பதால், அவர்களுக்கு ஒரு பிரச்னை என்றால் நிச்சயம் போராடுவேன் என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.

பெரம்பலூரில் உள்ள தனியார் கல்வி குழுமத்தின் நட்சத்திர விழாவில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பாட்டு பாடி அசத்திய நடிகர் சிம்பு, மாணவ, மாணவிகளுடன் நடனமாடி மகிழ்ந்தார்.
 
தொடர்ந்து மாணவர்களிடையே பேசிய அவர், நிறையப் பேர் தன்னை பெண்களுக்கு எதிரானவன் என நினைத்திருப்பதாகவும், அது தவறு எனவும் கூறினார். பெண்கள் மீது தான் அதிக அன்பும், மரியாதையும் வைத்திருப்பதாகவும், பெண்களுக்கு எந்த பிரச்னை ஏற்பட்டாலும் தொடர்ந்து குரல் கொடுத்து, அவர்களுக்காக போராடுவேன் எனவும் அவர் கூறினார்.

Comment

Successfully posted