நாட்டின் பாதுகாப்புக்காக ரூ.1 கோடி நன்கொடை வழங்கிய முன்னாள் விமானப்படை வீரர்

Jul 17, 2019 04:37 PM 258

இந்திய விமானப்படையில் தாம் பணியாற்றியதற்கு பரிசாக முன்னால் விமானப்படை வீரர் ரூ.1 கோடியை இந்திய பாதுகாப்பு அமைச்சகத்துக்கு நன்கொடை வழங்கியிருக்கிறார்.

சிபிஆர் பிரசாத் என்கிற அந்த விமானப்படை வீரர் கடந்த திங்கள் கிழமை பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து இதற்கான காசோலையை வழங்கினார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தான் விமானப்படையில் 108 மாதங்கள் பணியாற்றியதாகவும், அதற்கு பரிசாக ரூ.1.08 கோடி ரூபாயை பாதுகாப்புக்கு கொடுக்க விருப்பப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும் பணி காலத்திற்கு பின்னர் ஒரு கோழிப்பண்ணையை தொடங்கி எனது குடும்பத்தினருக்கான தேவையை நிறைவேற்றிய பிறகு தனக்கு கிடைத்த அனைத்தையும் பாதுகாப்பிற்காகவே கொடுக்க விரும்பியதாகவும் குறிப்பிட்டார்.

அவர் ஓய்வு பெற்று 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted