ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்-தமிழக அரசு

Nov 15, 2019 11:07 AM 98

மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளர் எஸ்.பழனிசாமி உட்பட பல்வேறு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த எஸ்.பழனிசாமியை டவுன் பஞ்சாயத்து இயக்குநராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்ரமணியன், மாநில தலைமை தேர்தல் ஆணைய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சை மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதே போல், சென்னை மாநகர துணை ஆணையர் கோவிந்தராவ், தஞ்சை மாவட்ட ஆட்சியராகவும், விருதுநகர் ஆட்சியர் சிவஞானம், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை செயலாளராகவும், குடிமைப் பொருள் வழங்கல் துறை ஆணையர் கண்ணன், விருதுநகர் மாவட்ட ஆட்சியராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், மதுரை முன்னாள் ஆட்சியர் ராஜசேகர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவராகவும், வேளாண்துறை கலை, கலாச்சார துறை ஆணையராக இருந்த சிஜி தாமஸ் வைத்யன், பள்ளி கல்விதுறை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Comment

Successfully posted