காணொலி வாயிலாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம்

Jun 01, 2021 12:38 PM 3112

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டம் இன்று காணொலி வாயிலாக நடைபெறுகிறது.

அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை, கொரோனா பேரிடருக்கு மத்தியில் நடத்த இயலுமா என்பது குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய ஆலோசனை நடத்தப்படுகிறது.

இதுகுறித்து சாதக பாதகங்கள் குறித்து பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி விளக்குகிறார்.

அடுத்த 8 ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணைகளை தீர்மானிப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது

Comment

Successfully posted