டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா ?

Jun 15, 2021 01:10 PM 2174

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத்தொகையை ஐ.சி.சி அறிவித்துள்ளது. வருகிற 18ம் தேதி நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், இந்திய அணியும், நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணிக்கு பரிசுத் தொகையாக 11 கோடியே 71 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஐ.சி.சி அறிவித்துள்ளது. தோல்வி பெறும் அணிக்கு 5 கோடியே 85 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக நடத்தப்படும் இந்த போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 

Comment

Successfully posted