விராட் கோலியை கவுரவபடுத்திய ஐசிசி

Jan 22, 2019 01:06 PM 291

இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியில் 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ள நிலையில் விராட் கோலியை கேப்டனாக நியமித்து ஐசிசி கவுரவபடுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டிலும் உலகின் ஒட்டுமொத்த வீரர்களில் சிறந்த வீரர்களை தேர்வு செய்து டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கான கனவு அணியை ஐசிசி அறிவித்து வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான 11 பேர் அடங்கிய சிறந்த ஒரு நாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான அணியை அறிவித்துள்ளது. இந்த இரண்டு அணிக்கும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியையே கேப்டனாக நியமித்து ஐசிசி கவுரவபடுத்தியுள்ளது. அதேபோல் ஜஸ்பிரித் பும்ராவை இரண்டு அணியிலும் தேர்வு செய்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ரிஷப் பண்டை டெஸ்ட் அணியிலும், ரோஹித் ஷர்மா, குல்தீப் யாதவ் ஆகியோரை ஒரு நாள் அணியிலும் தேர்வு செய்துள்ளது. இந்த பட்டியலில் அதிகபட்சமாக 5 இந்திய வீரர்கள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Comment

Successfully posted