ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பான வழக்கு சிபிஐக்கு மாற்றம்

Dec 15, 2019 10:33 AM 279

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்தீப் சென்னை ஐஐடி நிறுவனத்தில் முதுநிலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.

கடந்த மாதம் 9ஆம் தேதி மாணவி பாத்திமா, விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார். மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். 50 பேரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

Comment

Successfully posted