முதல் 20 ஓவர் கிரிக்கெட் - இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகள் நாளை மோதல்

Nov 03, 2018 10:41 AM 286

தோனி இல்லாத நிலையில் இந்தியா- மேற்கு இந்திய தீவுகள் அணிகள் இடையேயான இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரை இந்திய அணி வென்றுள்ள நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை கொல்கத்தாவில் தொடங்குகிறது.

இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் நடப்பு உலக சாம்பியனாக மேற்கு இந்திய தீவுகள் இருக்கிறது. அதேநேரம் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தரவரிசையில் இந்திய அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. எனவே இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஆட்டங்கள் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை நடக்கவுள்ள போட்டியில் இருந்து முன்னாள் கேப்டன் தோனி நீக்கப்பட்டுள்ளார். இளம் வீரர் ரிஷப் பந்த்துக்கு வழிவிடும் வகையில் தோனி விலகியதாக கூறப்படுகிறது. இதனிடையே கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கும் விதமாக இந்த இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரோகித் சர்மா கேப்டனாக பொறுப்பு வகிப்பார்.

Comment

Successfully posted