ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு: ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல்

Oct 18, 2019 04:08 PM 152

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரம் உட்பட14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு வெளிநாட்டு முதலீடு பெறுவதற்கு முறைகேடாக அனுமதி வழங்கியதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ப.சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ஆம் தேதி கைது செய்த சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வந்தது. இதே வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக அமலாக்கத்துறையும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.வழக்கை வரும் 24ஆம் தேதிக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஒத்திவைத்தது

Comment

Successfully posted