ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் ப.சிதம்பரம் ஆஜர்

Dec 19, 2018 12:52 PM 204

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கு விசாரணைக்காக அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.

2007-08 ஆண்டில் அயல்நாட்டு முதலீடு மேம்பாட்டு வாரியம் மூலம் ஐஎன்எக்ஸ் மீடியாவிற்கு சட்டவிரோதமாக ஒப்புதல் வழங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக ப.சிதம்பரம் மீது புகார் எழுந்தது. இதுதொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்திவருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கமளிக்க ப.சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதனைதொடர்ந்து விசாரணைக்காக டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆஜரானார்.

Comment

Successfully posted