ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு

Sep 25, 2019 12:26 PM 294


ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் சிறையில் உள்ள பா.சிதம்பரம் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனுவிற்கு டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கவுள்ளது.

ஐ.என்.எக்ஸ் மீடியாவிற்காக சட்டவிரோத பணப்பரிவர்த்தனையில் ஈடுபட்ட பா. சிதம்பரத்தை, சிபிஐ அதிகாரிகள் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள சிதம்பரம் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இதற்கிடையில், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது. 4 நாட்களாக சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரித்து வரும் டெல்லி உயர்நீதிமன்றம், இன்று தீர்ப்பு வழங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Comment

Successfully posted