ஐ.பி.எல். 2019: புதிய பெயருடன் களமிறங்குகிறது டெல்லி அணி

Dec 04, 2018 09:55 PM 120

2019-ம் ஆண்டு ஐ.பி.எல் தொடரில் டெல்லி அணி புதிய பெயருடன் களமிறங்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து ஐ.பி.எல். தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 11 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த நிலையில், ஐ.பி.எல். தொடரில் இதுவரை வெற்றி பெறாத டெல்லி அணி, டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரை டெல்லி கேப்பிடல்ஸ் என பெயர் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஐ.பி.எல். தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற இலக்குடன் அந்த அணியின் நிர்வாகம் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இளம் வீரர்களை உள்ளடக்கிய டெல்லி அணியின் பயிற்சியாளர் குழுமத்தில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment

Successfully posted