ஐ.பி.எல். சீசன்-15 அணிகள் தக்க வைத்துக்கொள்ளும் 4 வீரர்கள்

Dec 01, 2021 04:30 PM 7978

ஐ.பி.எல். 15வது சீசனுக்கான மெகா ஏலம் அடுத்தாண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கிறது. இதனையடுத்து, ஐ.பி.எல் அணிகள், 4 வீரர்கள் தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது.

image

அதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்த நிலையில், தக்க வைக்கப்பட்ட வீரர்களின் பெயர்களை அணி நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன. அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயின் அலி ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

மும்பை அணியில், ரோகித் சர்மா, பும்ரா, பொல்லார்ட், சூர்ய குமார் யாதவ் ஆகியோரும், பெங்களூரு அணியில் விராட் கோலி, கிளேன் மெக்ஸ்வெல், முகமது சிராஜ் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

கொல்கத்தா அணியில் ஆண்ட்ரூ ரசல், வருண் சக்கரவர்த்தி, வெங்கடேஷ் ஐயர், சுனில் நரேன் ஆகியோரும், ஐதராபாத் அணியில் கேன் வில்லியம்சன், அப்துல் சாமத், உம்ரன் மாலிக் ஆகியோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

இதே போல், பஞ்சாப் அணியில் மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங் ஆகியோரும், ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன், ஜாஸ் பட்லர், யாஷ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும், டெல்லி அணியில் அக்‍ஷர் படேல், ரிஷப் பண்ட், பிர்த்திவி ஷா, அன்ரிச் நோக்கியா ஆகியோரும் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

image

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கே.எல்.ராகுல், ரெய்னா, ஸ்ரேயாஸ் ஐயர், வார்னர், ரஷித் கான், பாண்டியா சகோதாரர்கள் ஆகியோர் அணிகளில் இருந்து கழற்றிவிடப்பட்ட நிலையில், அவர்கள் அனைவரும் அடுத்தாண்டு நடைபெறும் மெகா ஏலத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.

இந்த நிலையில், கே.எல்.ராகுலை வாங்க புதிய அணிகளான அகமதாபாத், லக்னோ அணிகள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

Comment

Successfully posted