ஐபிஎல் : இன்று கிங்ஸ் லெவன் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதல்

Mar 25, 2019 12:00 PM 95

ஐபிஎல் தொடரின் 4வது ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. ஜெய்ப்பூரில் நடக்கும் இந்த போட்டியில் கிங்ஸ் லெவன் அணியை ரவிச்சந்திரன் அஷ்வின்னும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை ரஹானேவும் வழி நடத்துகின்றனர். இந்த ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் அணியில் இடம்பெற்றுள்ள அதிரடி ஆட்டக்காரர் கெயில் புயல் தாக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கிங்ஸ் லெவன் அணியில் ராகுல், மில்லர் என அதிரடி ஆட்டக்காரர்களுக்கு பஞ்சமே இல்லை. அதே போல் ராஜஸ்தான் அணியில் உள்ள பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்மித் ஆகியோரும் அதிரடியாக ஆட்டக்கூடியவர்கள். ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.

Comment

Successfully posted