திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இஸ்ரோ தலைவர் சிவன் வழிபாடு

Dec 10, 2019 01:50 PM 165

ரிசாட் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட உள்ள நிலையில் இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ‘ரிசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைக்கோளைத் தயாரித்து உள்ளது. இந்தச் செயற்கைக்கோள் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் மூலம் நாளை பிற்பகல் 3.25 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இதற்கான கவுன்ட் டவுன் இன்று தொடங்கிய நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று காலை சுவாமி தரிசனம் செய்தார். அவருக்குத் தேவஸ்தான கூடுதல் நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி தீர்த்த பிரசாதங்களை வழங்கினார்.

Comment

Successfully posted