ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: மும்பையை வீழ்த்தி கோவா மீண்டும் முதலிடம்

Feb 13, 2020 11:26 AM 308

கோவாவில் நடைபெற்ற ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் மும்பை சிட்டி எப்சியை 5-2 என்ற கணக்கில் வீழ்த்திய கோவா அணி மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறியது.

10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக்  கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.கோவாவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் எப்.சி. கோவா, மும்பை சிட்டி எப்.சி. அணிகள் மோதின.

ஆட்டத்தின் முதல் பாதியில் இருந்தே கோவா அணி வீரர்கள் கோல் மழை பொழிந்தனர். இதனால் முதல் பாதியில் 4-1 என கோவா முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் தலா ஒரு கோல் அடித்தனர். இறுதியில், கோவா அணி 5-2 என்ற கோல் கணக்கில் மும்பை அணியை வீழ்த்தி வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

Comment

Successfully posted