சித்தூர் அருகே கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை

Oct 17, 2019 01:43 PM 45

ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் இரண்டாவது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கல்கி பகவான் மகனான கிருஷ்ணாஜி தலைமையில் இயங்கும் ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் பல்வேறு பகுதிகளிலுள்ள அனைத்து ஆசிரமங்களில் நேற்று முதல் சோதனை நடைபெற்று வருகிறது. கல்கி பகவானின் மகனான கிருஷ்ணாஜி வெளிநாடுகளிலுள்ள பல்வேறு நிறுவனங்களை பல 100 கோடிகள் முதலீடு செய்ததாக வந்த தகவலை அடுத்து வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் உள்ள வரதையபாளையம் கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக சோதனை நீடிக்கிறது. இதில் கணக்கில் வராத பல கோடி ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இதேபோன்று, சென்னையில் உள்ள கல்கி ஆசிரமத்துக்கு சொந்தமான நிறுவனத்திலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Comment

Successfully posted