பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் உருகிய பிரம்மாண்ட பனிப்பாறை

Aug 19, 2019 04:21 PM 204

பருவநிலை மாற்றத்தால் ஐஸ்லாந்தில் பனிப்பாறை ஒன்று முழுவதுமாக உருகியுள்ளதற்கு, அப்பகுதி மக்கள் சூழலியலாளர்கள் மற்றும் விஞ்ஞானிகள் துக்கம் அனுசரித்தனர்.

வெப்பமயமாதலால் ஐஸ்லாந்து நாட்டின் பல்வேறு பனிப்பாறைகள் உருகி வருகின்றன. இதனை தொடர்ந்து ஓகேஜோகுல் என்ற பிரம்மாண்ட பனிப்பாறை 20ம் நூற்றாண்டு முதல் உருகி வந்தது. இவ்வாண்டு எடுக்கப்பட்ட செயற்கைகோள் படத்தில், பிரம்மாண்ட பனிப்பாறையாக காட்சியளித்த ஓகேஜோகுல் முற்றிலும் உருகிய நிலையில், சிறு சிறு திட்டுகளாக காட்சியளித்தது.

இந்நிலையில் முற்றிலும் உருகிய முதல் பனிப்பாறைக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் விஞ்ஞானிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அப்பகுதி மக்கள் அனைவரும் ஓகேஜோகுல் இருந்த இடத்தில் கூடினர். மேலும் பருவநிலை மாற்றத்தின் தீவிரத்தை எச்சரிக்கும் வகையிலான வாசகங்கள் அடங்கிய உலோக தகட்டை, அங்கிருந்த பாறையில் பதித்தனர்.

Comment

Successfully posted