முன்னாள் கடற்படைத் தளபதி மனோகர் பிரகலாத் மறைவு

Nov 05, 2018 10:23 AM 414

இந்தியா- பாகிஸ்தான் இடையே 1971-ல் நடந்த போரில், இந்தியப் படையை வழிநடத்திய கடற்படை தளபதி மனோகர் பிரகலாத் காலமானார்.

மகாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள வின்சர்னி கிராமத்தில் பிறந்தவர் மனோகர் பிரகலாத். கடந்த 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போரின்போது கடற்படை தளபதியாக இருந்து இந்தியப் படையை வழிநடத்தினார்.

அந்த போரில் இந்தியா பெற்ற வெற்றி குறிப்பிடத்தக்க ஒன்றாக பார்க்கப்படுகிறது. வீரர் சக்ரா உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற பிரகலாத், வயது முதிர்வு காரணமாக தனது சொந்த கிராமத்தில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 91.

மனோகர் பிரகலாத் மறைவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related items

Comment

Successfully posted