தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால் திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல்??

Aug 03, 2018 03:44 PM 758

 

திருப்பரங்குன்றம் தொகுதி  அதிமுக எம்.எல்.ஏ.  ஏ.கே.போஸ்  மாரடைப்பால் நேற்று முன்தினம் மரணமடைந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர்  ஏ.கே.போஸ் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, திருப்பரங்குன்றம் தொகுதி காலியாக உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். தேர்தல் ஆணையம் உத்தரவிட்டால், திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்றும் சத்யபிரதா சாஹூ தெரிவித்தார்.

Comment

Successfully posted

Super User

சூப்பர் சார்