பகலில் நைட்டி அணிந்தால் ரூ. 2000 அபராதம்! விசித்திர கிராமம்!

Nov 09, 2018 03:32 PM 604

பகலில் நைட்டி அணிந்தால் ரூ. 2000  அபராதம். ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டம் நிடமரு அருகே உள்ள தொக்கலப்பள்ளி கிராமம் தான் அது. பெண்கள் பகல் நேரங்களில் நைட்டி அணிவது, நெருடலாக இருப்பதாக இந்த ஊர் பெரியவர்கள் உணர்ந்துள்ளனர். கடை வீதிகளில் பெண்கள் பகல் நேரங்களில் நைட்டி அணிந்து செல்வதை அவர்கள் விரும்பவில்லை. இந்நிலையில் ஊர் கூட்டம் நடத்தி, பகல் நேரத்தில் நைட்டி அணிய தடை விதித்துள்ளனர்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை பெண்கள் நைட்டி அணிய கூடாது. மீறினால் 2 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். யாராவது தெரியாமல் நைட்டி அணிந்து சென்றால், அதுபற்றி ஊர் கமிட்டிக்கு தகவல் தெரிவிப்பவர்களுக்கு ஆயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. சுமார் 6 மாதமாக இந்த புதிய விதி நடைமுறையில் இருப்பதாகவும், ஆனால் இதுவரை யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து அண்மையில் தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. 

 

Comment

Successfully posted

Super User

அப்படியா