மக்களின் எழுச்சியை பார்த்தால் தான், அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்துவேன் - நடிகர் ரஜினி

Mar 12, 2020 12:31 PM 300

மக்களின் எழுச்சியை பார்த்தால் தான், அரசியலுக்கு வருவதை உறுதிப்படுத்துவேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இருபெரும் ஜாம்பவான்களை எதிர்த்து வெறும் சினிமா புகழை மட்டுமே வைத்து வெற்றி பெற முடியாது என தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதாக 26 ஆண்டுகளாக நான் கூறிவருவதாக சிலர் விமர்சிப்பதாகவும், 2017 டிசம்பர் மாதத்தில் முதன்முதலாக அரசியல் பிரவேசத்தை பற்றி தான் அறிவித்ததாகவும் குறிப்பிட்டார்.

Comment

Successfully posted