இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ திறப்பு விழா இன்று நடைபெற்றது

Feb 03, 2021 03:39 PM 1017

பிரசாத் ஸ்டூடியோடிவில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், கோடம்பாக்கத்தில் புதிய ஸ்டூடியோ திறந்துள்ள இசையமைப்பாளர் இளையராஜா, முதல் பாடலை ஒலிப்பதிவு செய்துள்ளார்.

சென்னை வடபழனியில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக இசைப்பணிகளை மேற்கொண்டுவந்த இசையமைப்பாளர் இளையராஜா அண்மையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். சமரச தீர்வுக்கு பின்னர், ஸ்டூடியோவுக்குள் இருந்த இளையராஜாவின் உடமைகள் அவரிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிலையில், கோடம்பாக்கத்தில் உள்ள பழைய எம்.எம். தியேட்டர், இருந்த இடத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் புதிய ஸ்டூடியோ திறக்கப்பட்டுள்ளது. அங்கு, வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் படத்திற்கான பாடல் ஒலிப்பதிவை இளையராஜா இன்று மேற்கொண்டார். வெற்றிமாறன் படத்திற்கு முதல் முறையாக இளையராஜா இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், நவீனத்திற்கு ஏற்றார் போல் மாறி வரும் இசைத்துறையில் என்றும் மாறாத தனது இசையைப் போல், எதிர் சந்ததியினருக்கு இந்த ஸ்டூடியோ உதவிக்கரமாக இருக்கும் என தெரிவித்தார்.

 

Comment

Successfully posted