பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது இளையராஜா புகார்!

Jul 31, 2020 10:07 PM 595

சென்னை பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் மீது சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா புகார் அளித்துள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் ஸ்டூடியோவில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு எல்.வி.பிரசாத் தனி தியேட்டர் ஒன்றை வழங்கியிருந்தார். இங்கு தான் பெரும்பாலான படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். பிரசாத் ஸ்டூடியோவின் வருமானத்தை பெருக்கும் விதமாக, இளையராஜாவுக்கு ஒதுக்கப்பட்டிருந்த அறையை இடித்து, மாற்று தியேட்டர் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதனை அறிந்த இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் இளையராஜாவுக்கு ஆதரவாக பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகத்தை சந்தித்து பேசினர். இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் இளையராஜா வழக்குத் தொடர்ந்தார். வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிரசாத் ஸ்டூடியோ உரிமையாளர் சாய் பிரசாத் மீது, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் இளையராஜா புகார் அளித்துள்ளார். பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள தனது அறையில் இருந்த இசைக் குறிப்புகளை சேதப்படுத்தியுள்ளதாக, அந்த புகாரில் இளையராஜா குறிப்பிட்டுள்ளார்.

Comment

Successfully posted