குரங்கணி மலை காட்டுப் பகுதியில் சட்டவிரோதமாக மரங்கள் கடத்தல்

May 05, 2019 09:57 PM 324

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி மலை காட்டுப் பகுதியில் சட்ட விரோதமாக வெட்டி கடத்தப்பட இருந்த, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்கள் மற்றும், மரக் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி மாவட்டம் போடி அருகே, குரங்கணி மலை காட்டு பகுதியில் அரிய வகை மரங்கள் வெட்டப்படுவதாக வருவாய் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் வட்டாச்சியர் மணிமாறன் நேரில் சென்று ஆய்வு செய்த போது, மரங்கள் வெட்டிக் கடத்தபட இருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள அரிய வகை மரங்களையும், இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டது. மேலும், இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில், போடி மேலத்தெருவை சேர்ந்த அமமுக பிரமுகர் சருபுதின் என்பவருக்கு, பிச்சாங்கரை பகுதியில் தோட்டம் இருப்பதும், அங்கு மராமத்து பணிகளுக்காக மரங்களை வெட்டுவதும் தெரியவந்தது. இது குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Comment

Successfully posted