மத்திய பிரதேசத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Sep 09, 2019 01:34 PM 83

வட மாநிலங்களில் வெளுத்து வாங்கி வரும் கனமழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, உத்தர பிரதேசதம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் பெய்து வரும் கனமழையால், சாலை மற்றும் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கி உள்ளது. சாலைகளில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்குவதால், வாகனங்கள் மிதந்தபடி செல்கின்றனர். வெளியே செல்ல முடியாமல் மக்கள் வீடுகளிலேயே முடங்கி கிடக்கின்றனர். தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி வருகின்றனர்.

Comment

Successfully posted