பனி பொழிவால் சம்பா பயிர்கள் பாதிப்பு - விவசாயிகள் கவலை 

Dec 18, 2018 04:10 PM 191

நாகை மாவட்டத்தில் கடும் பனி பொழிவால் சம்பா நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.


நாகை, மயிலாடுதுறை, செம்பனார்கோயில், தரங்கம்பாடி, பொறையாறு, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக உள்ளது. காலை 8 மணி வரை பனி சூழ்ந்து காணப்படுகிறது.

அருகில் உள்ள கட்டிடங்கள் தெரியாத அளவில் பனிப்பொழிவு இருந்ததால், கடும் குளிர் நிலவியது. இதனால் அதிகாலையில் நடைபயிற்சி செல்பவர்கள் சிரமப்பட்டனர். மூடு பனி நிலவுவதால், சம்பா நெற்பயிர்களில் பூச்சி தாக்குதல் அதிகரிக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


 

Comment

Successfully posted