பீகாரில் பாஜக - ஐக்கிய ஜனதாதளம் கட்சிகள் தலா 17 இடங்களில் போட்டி

Dec 23, 2018 01:46 PM 228

பீகாரில் பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் தலா 17 தொகுதிகளில் போட்டியிடுவது என முடிவாகியுள்ளது.

அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில் பீகாரில் பாஜக கூட்டணி இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் பாஜக தலைவர் அமித் ஷாவை நிதிஷ்குமார் மற்றும் ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் சந்தித்து பேசி தொகுதி பங்கீட்டை இறுதி செய்தனர்.

அதன்படி பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகள் தலா 17 தொகுதிகளில் போட்டியிட உள்ளன. மற்றொரு கூட்டணி கட்சியான ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜன சக்தி கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 3 கட்சிகளும் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Comment

Successfully posted