சென்னையில், இன்று முதல்   தளர்வுகள் அமலுக்கு வருகின்றன!

Jul 06, 2020 06:35 AM 2351

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று முதல் மறு உத்தரவு வரும் வரை சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்றும், ஆன்லைன் உணவு சேவைக்கு இரவு 9 மணி வரை மட்டுமே அனுமதியளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேநீர் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பார்சல் வழங்க மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், காய்கறி, மளிகை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  வணிக வளாகம் தவிர்த்து அனைத்து ஷோரூம்கள், பெரிய கடைகள் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற செயல்பாடுகளை பொறுத்த வரை, ஜூன் 19ம் தேதிக்கு முந்தைய கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் பொருந்தும் எனக் கூறப்பட்டுள்ளது. 

Comment

Successfully posted