டெல்லியில் காற்று மாசு இன்று அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம்

Nov 20, 2019 10:07 AM 254

டெல்லியில் நேற்று காற்று மாசு சற்று குறைந்திருந்த நிலையில் இன்று முதல் மீண்டும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தலைநகர் டெல்லியில் காற்று மாசு காரணமாக பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகன புகை மற்றும் விவசாய நிலங்களில் எரிக்கப்படும் காய்ந்த சருகுகள் ஆகியவற்றால் டெல்லியில் காற்று மாசு அதிகரிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நேற்று டெல்லியில் காற்றின் தரம் சற்று மேம்பட்டு இருந்த நிலையில் இன்று மீண்டும் காற்று மாசு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அடுத்த இரண்டு நாட்களில் இது அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comment

Successfully posted