இந்தியாவில் , நேற்று ஒரே நாளில் கொரோனாவால் பாதித்த எண்ணிக்கை 1,06,750!

May 20, 2020 05:39 PM 777

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஐந்தாயிரத்து 611 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்து ஆறாயிரத்து 750 ஆக அதிகரித்துள்ளது. 

நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 37 ஆயிரத்து 136 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 325 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் 12 ஆயிரத்து 448 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 ஆயிரத்து 895 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத்தில் 12 ஆயிரத்து 140 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ள சூழலில், 719 பேர் உயிரிழந்துள்ளனர். தலைநகர் டெல்லியில் 10 ஆயிரத்து 554 பேரும், ராஜஸ்தானில் 5 ஆயிரத்து 845 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 5 ஆயிரத்து 465 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 926 பேரும் பாதிப்படைந்துள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. 

Comment

Successfully posted