ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளது - மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா

Oct 10, 2018 01:32 AM 346

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் பரவல் கட்டுக்குள் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா தெரிவித்துள்ளார்.

ஜெய்ப்பூரில் 22 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து மாநிலத்தில் ஜிகா வைரஸ் பரவல் தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம் பிரதமர் அலுவலகம் விரிவான அறிக்கையை சமர்பிக்குமாறு கோரியது. 

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் நட்டா, ஜிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசுக்கு உதவி செய்ய மத்திய அரசின் உயர்மட்ட குழு ஜெய்பூரில் உள்ளதாகவும்,  தொடர்ந்து கண்காணிக்க தேசிய நோய்கள் கட்டுப்பாட்டு மையத்தால் தனிப்பட்ட கட்டுப்பாட்டு அறைகள் செயல்பட்டு வருவதாக கூறினார்.

இது தொடர்பாக விழிப்புணர்வு முகாம்களை மேற்கொள்ள மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted