கர்நாடகாவில் ஜாத்ரா விழாவை முன்னிட்டு 178 ஜோடிகளுக்கு திருமணம்

Jan 23, 2020 04:28 PM 411

கர்நாடகாவில் சித்தூர் மடத்தின் ஜாத்ரா விழாவை முன்னிட்டு 178  ஜோடிகளுக்கு ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றது.

கர்நாடக மாநிலம் சித்தூர் மடத்தின் ஜாத்ரா திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை முன்னிட்டு சித்தூர் மடத்தின் சார்பில் 178 புதுமண ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. இந்த திருமணவிழாவிற்கு முன்னாள் பிரதமர் தேவேகவுடா  தலைமையேற்று நடத்திவைத்தார். சித்தூர் மடாதிபதி திருவிஜயேந்திர சரஸ்வதி உட்பட முக்கிய பிரமுகர்கள் மணமக்களை வாழ்த்தினர்.

Comment

Successfully posted