மெக்சிகோவில் விமான விபத்து - 101 பயணிகள் உயிர் தப்பினர்

Aug 01, 2018 01:11 PM 924

மெக்சிகோவின் வடக்கு மாகாணமான டுராங்கோவில் உள்ள விமானநிலையத்தில் இருந்து 97 பயணிகள் மற்றும் 4 ஊழியர்கள் உள்பட 101 பேருடன் ஏரோமெக்சிகோ (AERO MEXICO) என்ற விமானம் மெக்சிகோ சிட்டியை நோக்கி புறப்பட்டது. ஓடுதளத்தில் இருந்து புறப்பட்ட சில விநாடிகளிலேயே விமானம் திடீரென விபத்தில் சிக்கி  தீப்பிடித்து எரிந்தது. இதனையறிந்த, விமானி சாதூர்யமாக, விமானத்தை, விமானநிலையத்திற்கு அருகேயுள்ள புற்கள் நிறைந்த பகுதியில் தரையிறக்கியுள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்பு படையினர் பயணிகளை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 85 பேர் காயம் அடைந்துள்ளதாகவும், அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்றும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.  விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது.

Comment

Successfully posted