உதகையில் கடும் குளிர் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

Jun 13, 2019 12:22 PM 107

நீலகிரி மாவட்டத்தில் சாரல் மழை பெய்து வருவதால், உதகை உள்ளிட்ட இடங்களில் கடும் குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்து வருகிறது. உதகை நகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், அவ்வப்போது பலத்த காற்றுடன் மழை பெய்தது. தலைகுந்தா, அவலாஞ்சி, எமரால்டு உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், உதகைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

Comment

Successfully posted