தமிழகத்தில் 3 புதிய ரயில்களின் சேவை தொடங்கியது

Oct 15, 2019 05:13 PM 123

சேலம் - கரூர், கோவை - பழனி, கோவை - பொள்ளாச்சி இடையே 3 புதிய ரயில்களின் சேவையை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் காணோலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

கடைக்கோடியில் உள்ள பகுதிகளுக்கும் போக்குவரத்துக்கு வசதியை மேம்படுத்தும் வகையில் பத்து வழித்தடங்களில் புதிதாக ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் டெல்லியில் இருந்து காணொலிக் காட்சி மூலம் கொடியசைத்து ரயில் போக்குவரத்தை தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் சேலம் - கரூர், கோவை - பழனி, கோவை - பொள்ளாச்சி ஆகிய தடங்களில் புதிய ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சேலம், கோவை, பொள்ளாச்சி நகரங்களில் இதற்கான விழா நடைபெற்றது. புதிய ரயில்கள் சேவை தொடங்கப்பட்டு இருப்பது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

Comment

Successfully posted