தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை -அமைச்சர் விஜயபாஸ்கர்

Jan 23, 2020 03:36 PM 575

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் வராமல் இருக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
         
சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் புதிய மருத்துவமனை நுழைவு வாயில் மற்றும் யோகா மையத்தினை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதல் இல்லை என்றார். கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்க சீனாவில் இருந்து வரக்கூடியவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் பரிசோதனை செய்து வருவதாகவும் அமைச்சர் கூறினார்.

Comment

Successfully posted

Super User

OK Thanks