தமிழகத்தில் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் 1100 மருத்துவர்கள் நியமனம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

Oct 20, 2019 06:22 PM 299

தமிழகத்தில் இரண்டாம் நிலை மருத்துவமனைகளில் 1100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்...

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடரந்து திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்து நோயாளிகளிடம் நலம் விசாரித்தார். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் 2ஆம் நிலை மருத்துவமனைகளான மாவட்ட மருத்துவமனை, தாலுக்கா மருத்துவமனைகளில் ஆயிரத்து 100 மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 2ஆயிரத்து 345 செவிலியர்கள் தேர்வு செய்யப்பட்டுப் பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

 

Comment

Successfully posted