தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது -காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி

Jan 13, 2020 07:14 AM 559

தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக காவல்துறை கூடுதல் இயக்குனர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணியில், வியாபாரிகள் சங்கம் சார்பில் 45ம் ஆண்டு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை கூடுதல் இயக்குனர் எம்.ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் செய்தியர்களை சந்தித்த அவர், கடந்த ஒரு மாத காலமாக எடுக்கப்பட்ட விழிப்புணர்வு மற்றும் நடவடிக்கையின் காரணமாக தமிழகத்தில் ஆபாச படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், காவலன் செயலியை சுமார் 15 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாகவும், பெண்களுக்கு எந்த ஒரு அச்சுறுத்தலும் இல்லாதவாறு இருக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் காவல்துறை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Comment

Successfully posted