திருச்சி சிறுமி வழக்கில், பொதுமக்கள் சரியாக ஒத்துழைப்பு வழங்கவில்லை - டிஐஜி ஆனி விஜயா குற்றச்சாட்டு!

Jul 08, 2020 12:09 PM 958

திருச்சி சிறுமி எரிந்து இறந்த வழக்கில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட 8 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில் நெருங்கிய உறவினர்களான இருவரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

திருச்சி அதவத்தூர்பாளையத்தில் குப்பை கொட்ட சென்ற 9 ஆம் வகுப்பு மாணவி, எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பாக 10 பேரை விசாரித்து வந்த காவல்துறையினர், அவர்களில் 8 பேரை விடுவித்துள்ளனர். சிறுமியின் நெருங்கிய உறவினர்களான செந்தில், சசிகுமார் ஆகிய இருவரை போலீசார் தனி இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, போலீசாரின் விசாரணைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிப்பதில்லை என டி.ஐ.ஜி. ஆனி விஜயா தெரிவித்துள்ளார். சிறுமியின் உடற்கூறு ஆய்வு அறிக்கை இன்று கிடைத்து விடும் என்றும், சிறுமியின் பின்னந்தலையில் காயங்கள் இருப்பதாக வந்த தகவல்கள் பற்றி மருத்துவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

Comment

Successfully posted