உளுந்தூர்பேட்டையில் அடுத்தடுத்த 3 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம்

Dec 07, 2019 09:01 PM 373

உளுந்தூர்பேட்டையில் ஒரே தெருவில் நடந்த அடுத்தடுத்த 3 கொள்ளை சம்பவத்தில், 150 சவரன் நகை, வெள்ளி மற்றும் பணம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அன்னைதெரசா நகரில் வசித்து வரும் முதுநிலை வணிக மேலாளரான ஹரிகிருஷ்ணன் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து நகை, வெள்ளி, பணம் ஆகியவைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதை தொடர்ந்து, அருகிலுள்ள தனியார் ஓட்டுனர் பயிற்சி நிறுவன உரிமையாளர் ராஜராஜன் என்பவரின் வீட்டிலும், சார்பதிவாளர் சேகர் என்பவரின் வீட்டிலும் நகை, பணம் ஆகியவைகள் கொள்ளையடிக்கபட்டது. ஒரே நாளில் அடுத்தடுத்து 3 வீடுகளில், 150 சவரன் நகை, வெள்ளி மற்றும் 50 லட்சம் ரூபாய் ரொக்கம் ஆகியவைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர் கொள்ளை சம்பவம் குறித்து உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Comment

Successfully posted