மேற்கு வங்கத்தில் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்கள்

Jan 09, 2019 11:33 AM 77

மேற்கு வங்கத்தில் தொழிற்சங்கங்கள் நடத்தி வரும் போராட்டத்தில் பேருந்துகள் மீது கல் வீசப்படுவதால், ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்து பேருந்துகளை ஓட்டி வருகின்றனர். குறைந்தபட்ச ஊதியத்தை உறுதிபடுத்துதல் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் 48 மணி நேர போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதனையொட்டி, இடதுசாரி அமைப்புகள் வலுவாக உள்ள கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இதனிடையே ஹவுராவில் அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை கொண்டு தாக்குதல் நடத்தினர்.

பல இடங்களில் பேருந்துகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதால், பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில் கொல்கத்தாவில் கல்வீச்சில் காயமடையாமல் இருக்க பேருந்து ஓட்டுநர்கள் தலைக்கவசம் அணிந்தவாறு பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.

Comment

Successfully posted